Menu

உலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை

உலகத் தமிழ்ச் சங்கம் என்பது தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தமிழ்நாடு அரசால் மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு அரசு நிறுவனமாகும்.

 

இவ்வளாகத்தை தமிழக முதல்வர் 1 மார்ச் 2016 அன்று காணொளிக் காட்சி வாயிலாக சென்னையிலிருந்தவாரே திறந்து வைத்தார்.

 

பன்னாட்டு அளவிலான கருந்தரங்க கூடங்கள், ஆய்வரங்கம், நுாலகம், பார்வையாளர் அரங்கம் இதில் இடம் பெற்றுள்ளன. இவ்வளாகச் சுற்றுச் சுவர்களில் 1330 திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது.

 

காந்தி அருங்காட்சியகம் எதிரே செயல்படும் பழந்தமிழர் பெருமைகளை விளக்கும் சங்கத் தமிழ் காட்சிக் கூடம் இவ்வமைப்பின் ஓர் அலகாக செயல்படுகிறது.

 

அமைவிடம்

 

மதுரை தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியக சாலையில் மதுரை சட்டக் கல்லூரியை அடுத்து 87 ஆயிரம் சதுர அடியில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது.

 

வரலாறு

 

தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடத்தப் பெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் மதுரையில் உலகத் தமிழ் சங்கம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.

 

இதைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பதற்கான அரசு ஆணை வெளியிடப் பெற்று,

 

உலகத் தமிழ்ச் சங்க அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்காக மதுரையில் 14.5 ஏக்கர் நிலமும் பெறப்பட்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

 

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்க அமைப்பிற்கான பணியினைச் செயற்படுத்திட அறிவிப்பு வெளியிட்டதுடன்,

 

உலகத் தமிழ்ச் சங்க அலுவலகக் கட்டுமானப் பணிகள் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கச் செயற்பாடுகள் போன்றவைகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார்.

 

சங்க அமைப்பு

 

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

 

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாக உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகப் பணிகளுக்காக தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

 

பணிகள்

 

இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் உலகிலுள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இச்சங்கத்தில் தமிழ் தொடர்பான 30 துறைகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

 

உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஒரு அலகாக சங்கத் தமிழ் காட்சிக் கூடம் இதனருகே காந்தி அருங்காட்சியகம் எதிரில் செயல்படுகிறது.

 

மதுரை புதுமண்டபத்தின் சிறப்பு?

புதுமண்டபம் அல்லது வசந்த...

Leave a Reply

Left Menu Icon