Menu

Madurai 00:54 AM +24°C

திருவாதவூர் திருமறைநாதர் கோயில்,மதுரை

திருவாதவூர் திருமறைநாதர் கோயில் மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் மேலூரிலிருந்து மேற்கே எட்டு கி. மீ., தொலைவிலும் உள்ள திருவாதவூரில்அமைந்துள்ளது. இக்கோயிலில் வேதநாயகி அம்மன் உடனுறை திருமறைநாதர் மூலவராக காட்சி அளிக்கிறார்.

தல வரலாறு

சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் ‘வாதவூர்’ என்று பெயர் பெற்றது.

இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது.

ஒரு சமயம் திருக்கைலையில் பைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைக்கச் செய்தார் சிவபெருமான். இதனால் பைரவர், ஈசனிடம் தனது நாய் வாகனம் வேண்டினார். ‘திருவாதவூர் சென்று வழிபட தொலைந்த வாகனம் கிடைக்கும்’ என்று அருளினார். கைலாய மலையில்  இருந்து திருவாதவூர்வந்த பைரவர் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்தார். அது பைரவர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள பைரவர் தீர்த்தத்தில் நீராடி திருமறை நாதரை வழிபட்டு தனது நாய் வாகனத்தை மீட்டார். இத்தல பைரவரைத் தொடர்ந்து 8 அஷ்டமி தினங்களில் வழிபட்டு வந்தால் தொலைந்து வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல சனி,பைரவர்  மற்றும் திருமறைநாதரை 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் அகன்றுவிடும்.

மஹாவிஷ்ணுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.

srimathi-cup.gif (728×90)

 

கோயில் அமைப்பு

இங்கு தான் சிவபெருமான் தனது கால் சிலம்பொலியை மாணிக்கவாசகர்  கேட்கச் செய்தார். இந்த மண்டபத்தை அமைத்தவர் மாணிக்கவாசகர். இங்கு மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதி உள்ளது. கரத்தில் திருவாசக  ஏந்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மதேவர் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலதிருமேனியாக அம்பிகை இங்கு தோன்றினாள். எனவே அம்பிகையின் பெயர் ஆரணவல்லி என்று அழைக்கப்படுகிறது.

மஹாவிஷ்னுவின் காவல் தெய்வமாக ஸ்தாபிக்கப்பட்ட புருஷ மிருகத்துக்கு இங்கு சிலை உள்ளது. ஆலயத்தின் கிழக்கே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.

கோயிலின் சிறப்பு

திருமறை நாதர் கோவில் தொன்மை மிக்க சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். இக்கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால்  அமைக்கப்பட்டது என்பர். இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்பநுட்பம் வாய்ந்தவை. மூலவரின் கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. இங்கு அனுக்ஞை விநாயகர் சந்நிதி அருகிலுள்ள ஆறுகால் மண்டபம் ‘கொடுங்கைகளுக்‘குப் புகழ் பெற்றதாகும். நடராசருக்கென அழகிய சந்நிதி உள்ளது. அம்மனின் சந்நிதியிலுள்ள கொடுங்கைகளும் வேலைப்பாடுமிக்கவை.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்!!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்...

Leave a Reply

Left Menu Icon