Menu

திருமங்கலம் (மதுரை)

திருமங்கலம் மதுரை மாவட்டத்தின் சந்திப்பு நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

 

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9.75°N 78.0°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.

 

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,426 ஆண்கள், 25,768 பெண்கள் ஆவார்கள். திருமங்கலத்தில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர்.

 

இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகம். திருமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.86%, பெண்களின் கல்வியறிவு 86.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே.

 

திருமங்கலம் மக்கள் தொகையில் 4,952 (9.67%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு சமமானதாக உள்ளது.

 

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45% ஆக இருக்கின்றனர்.

 

அதையடுத்து இஸ்லாமியர்கள் 12.37% கிருஸ்துவர்கள் 3.06%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருமங்கலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.21%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். திருமங்கலத்தில் 13,564 வீடுகள் உள்ளன.

 

பெயர்க் காரணம்

 

மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து, பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர்.

 

மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார்.

 

இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் “திருமாங்கல்யபுரம்’ என அழைத்தனர். காலப் போக்கில் “திருமங்கலம்’ என பெயர் மாறியது.

வரலாற்றுச் சிறப்புக்கள்

 

அரசு அலுவலகங்கள்

 

ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட தென் தமிழகத்தில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, மதுரையில் தலைமை நீதிமன்றம் ஒன்றையும் முக்கிய அரசு அலுவலகங்களையும் நிறுவினர்.

 

அலுவலகங்கள் அனைத்தும் வைகையாற்றின் வடக்கில் இருந்ததால், மழைக் காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்து ஆற்றுவெள்ள நீரைக் கடந்து வர சிரமம் ஏற்பட்டது.

 

அதனால், திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், துரைமார்கள் பங்களா (தற்போதைய டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்க கொட்டி ஆகியவை உருவாக்கப்பட்டது.

 

வைகைக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உட்பட அனைத்து வழக்குகளும் இங்குள்ள நீதிமன்றத்தி்ல் விசாரிக்கப்பட்டு நீதியும் வழங்கப்பட்டது.

 

மேலும், 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள், கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இங்கு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அவரை தூக்கிலிடப்பட்ட தூக்குக் கயிறும் இங்குள்ள ஆவணக் காப்பகத்தில்(டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டு வந்தனர். காவலர்களின் அலட்சியத்தால், அக்கயிற்றை தொலைத்து விட்டனர்.

 

தொடருந்து நிலையம்

 

1875ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது. எதிர்வரும் காலங்களில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கணக்கிற்கொண்டு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது.

 

அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக செல்லும் அனைத்து நீராவி தொடருந்துகளுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக திருமங்கலத்தை தெரிவு செய்து, 20 அடி உயர இரும்புச் சாரங்கள் அமைத்து, அதன் மீது இரும்பினாலான ஒரு நீர்த்தேக்கத் தொட்டியையும் நிறுவினர்.

 

பின்னர் டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது.

 

வழிபாட்டு இடங்கள்

 

திருமங்கலம், அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் (உற்சவர்)

திருமங்கலம்,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் (உற்சவர்)

மீனாட்சி அம்மன் கோயில்.

ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோவில்.

கோர்ட் பிள்ளையார் கோயில்.

முனீஸ்வரன் கோயில்.

இசுலாமியப் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள்

கீழபள்ளிவாசல்.

மேலபள்ளிவாசல்.

 

திருவிழாக்கள்

பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவின் போது மட்டும் செய்து விற்கப்படும் பால் ஐஸ் பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவின் போது மட்டும் செய்து விற்கப்படும் பால் ஐஸ் ஒவ்வோர் ஆண்டும்,

 

தமிழ் இரண்டாம் மாதமான வைகாசியில், அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் கோயில் திருவிழாவாக பதிமூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டு, கொடியேற்றம், காப்பு கட்டுதல், சாமி வீதி உலா முதலான தினசரி பூசைகள், பொருட்காட்சி மற்றும் பாட்டுக் கச்சேரி சேர்த்து, “வைகாசித் திருவிழா”வாக கொண்டாடப்படுகிறது.

 

போக்குவரத்து

 

சாலை வழி

மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7 ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து, பேருந்து வசதிகள் உள்ளன.

 

தொடருந்து வசதி

மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.

 

மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன.

 

அரசியல்

திருமங்கலம் நாடாளுமன்றத் தொகுதி விருதுநகர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.

 

குண்டாற்றில் கழிவுகள்

மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் நீர்க் கழிவுகள் முதலியன குண்டாற்றில் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால் குண்டாறு மாசடைந்தும், ஆக்கிரப்புகளால் சுருங்கியும் வருகிறது.

 

Leave a Reply

Left Menu Icon