Menu

மதுரையில் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு – 410க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 410க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை ஊக்குவித்து, வேலை வாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்தாரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மதுரையில் 3 நாட்கள் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கத்தார், குவைத், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 410 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். தமிழர்கள் தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில், தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள், தொழில்களின் சாதக, பாதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்து கலந்துரையாடினர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். பன்னாட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

இதுபோன்ற தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் மாநாடு, அடுத்த ஆண்டு தமிழக அரசு நடத்தும் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். தமிழர்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும், பல்வேறு தொழிலதிபர்கள் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும் மாநாடு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Left Menu Icon