Menu

Madurai 00:54 AM +24°C

வசந்தம் வீசும் மதுரையை சுற்றியுள்ள இடங்கள்

குட்லாடம்பட்டி அருவி

 

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி. அருவி 87 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.

 

அருவி அமைந்திருக்கும் மலை சிறுமலை என அழைக்கப்படுகிறது.விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவியில் குளித்து இயற்கையை ரசித்து செல்கின்றனர்.

 

அருவியின் அருகில் 500 ஆண்டுகள் பழமையான தாடகை நாச்சியம்மன் கோயில் உள்ளது.

 

திருமோகூர் கோவில்

 

மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், ஒத்தகடை பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் திருமோகூர் விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் விஷ்ணு காளமேக பெருமாளாக வீற்றிருக்கிறார்.

 

திருவாதவூர் கோவில்

 

சைவத்தலமான இந்த கோயில் மதுரையில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், ஒத்தக்கடையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த இடமாகும்.

 

ராமகிருஷ்ணமடம்

 

உலகம் முழுவதும் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை மதுரை நாராயண புரத்திலும் அமைந்துள்ளது.

 

கோச்சடை அய்யனார் கோயில்

 

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கோச்சடையில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது.

 

எல்லை காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கோயிலுக்கு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர்.

 

மாரியம்மன் தெப்பக்குளம்

 

திருமலை நாயக்க மன்னர், மீனாட்சி அம்மன் கோயில் அளவிற்கு பெரிய சதுர வடிவிலான தெப்பகுளத்தை அமைத்துள்ளார்.

 

இந்த குளம் 1000 அடி நீளமும், 950 அடி அகலுமும் கொண்டது. தெப்பக்குளத்தின் நடுவில் மண்டபமும், விநாயகர் சன்னதியும் உள்ளது.

 

ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு இடையே வரும் பவுர்ணமி மற்றும் திருவிழா காலத்தில் தெப்பக்குளம் நீரால் நிறைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக விளங்கும்.

 

இந்த குளத்திற்கு வைகையில் இருந்து நீர் கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது. நீர் நிறைந்திருக்கும் நாட்களில் படகு சவாரி விடப்படும்.

 

எழுகடல் தெரு, மதுரை

ஏழுகடல் தெரு, மதுரை (Elukadal Street, Maurai) மதுரை...

Leave a Reply

Left Menu Icon