Menu

மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது

மதுரைக்கு செல்வது எப்படி :-

 

சாலை வழி :

 

தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன.

 

எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்

தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி – பெங்களூரு – கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி – தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருச்சிராப்பள்ளி – தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம் ஆகியவை மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்.

 

இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன.

 

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும். இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம் (MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது.

 

அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன.

 

இரயில் வழி:

 

மதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் மிக முக்கியமான இரயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது.

 

மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், கொல்லம், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன.

 

மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது.

 

வான் வழி :

 

மதுரை விமான நிலையம் 1957ம் ஆண்டு அவனியாபுரத்தில் துவங்கப்பட்டது. இது மதுரை நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் உள்ளது.

 

இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

 

மதுரை விமான நிலையம் 2012ம் ஆண்டு சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

 

இந்த விமான நிலையத்திலிருந்து ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஜெட் ஏா்வேஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Left Menu Icon