Menu

மதுரை வீரன் வழிப்பாடு

மதுரை வீரன் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார்.

 

பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் தனித்தும், அல்லது அவருடைய இரு மனைவியருடனும் வணங்கப்படுகிறார்.

 

உருவ அமைப்பு

 

மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய திருவாளுடனும் முறுக்கிய மீசையடனும் காட்சியளிக்கின்றார். வலது புறப்புறத்தில் வைரவரும் இடது புறத்தில் பரியும் காணலாம்.

 

வழிபாடு

 

மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர்.

 

மதுரை வீரன் வழிபாடு மலேசியா, சிங்கப்பூர், பாலி, இலங்கை, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிப்பாடு என்ற கூற்றை இல்லை என ஆய்வாளர்கள் மறுக்கின்றனர்.

 

உண்மையில் சிவன், ஏசு, புத்தன், முருகன், ராமன், க்ருஷ்ணனை போல் மக்களை காக்க நீதி, சத்தியம் மற்றும் தர்மம் ஆகியவற்றை மண்ணில் நிலை நாட்ட அவதரித்த ஒரு தெய்வ பிறவிதான் மதுரைவீரன் என்று கருதுகின்றனர்.

 

மதுரை வீரன் வழிப்பாடு என்பது முறையான சைவ வழிப்பாடாகும். அவர் ஒரு காவலர் என்ற ஒரு காரணத்தினால் ஆதியில் பாமரமக்கள் அவரையும் காவல் தெய்வங்களில் ஒன்றாக இணைத்து பூஜைமுறைகளையும் அப்படியே நிறைவேற்றினர்.

 

இவர் தன் வாழ்நாளில் சாதி எதிர்ப்பையும் தன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கொண்டு போராடி இருந்ததால், அவர் மறைந்த பின் அன்னை மதுரை மீனாட்சியின் ஆணையையும் மீறி ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தினுல் வீரனுக்கு சிலை வைப்பதை தவிர்த்து மாறாக அவர் காவல் இனத்தவர் தெய்வம் என்றும் ஒதுக்கி விட்டனர்.

 

ஒன்றும் அறியாத பாமரமக்கள் அவர் தன் வாழ்நாளில் காவலராக இருந்ததை கருத்தில் கொண்டு அவரையும் மற்ற காவல் தெய்வங்களோடு ஒருவராக்கி விட்டனர் எனவேதான் அவர் காவல் தெய்வமானார்.

 

உண்மையில் அவருக்கும் காவல் தெய்வங்களான முனிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கருமுனி, செம்முனி, வால்முனி, ஜடாமுனி, கும்பமுனி, கங்கை முனி, நாதமுனி, மச்சமுனி, சிவமுனி, தவமுனி என இன்னும் பல முனிகள் இருப்பினும் மதுரைவீரன் என்று பெயர்வகையில் மாறுப்பட்டு நிற்பதிலேயே கண்டுக்கொள்ள இயலும்.

 

இன்னும் சொல்லப்போனால் வரலாறு கொண்ட காவல் சரித்திர நாயகர்கள் என்றால் அது மதுரை வீரன் மற்றும் சங்கிலி கருப்பன் மட்டும்தான். ஆனால் தொடக்க புள்ளியில் இருந்தே காவல் தெய்வங்கள் அனைவரையும் மக்கள் ஒரே கோட்டின் கீழ் நிறுத்தி சகோதரர்களாக வரிசை படுத்தி வணங்கினர்.

 

நாளடைவில் காவல் தெய்வ சக்திகள் யாவும் ஒரே சக்தியாய் வடிவம் பெற்றதை ஆன்மிகவாதிகள் ஒப்பு கொள்கின்றனர். எல்லா காவல் தெய்வங்களுக்கும் பலி படையல் இட்டு வந்த மக்கள் தொடக்கத்தில் இருந்தே மதுரை வீரனுக்கும் அப்படியே படையல் இட்டு வந்தனர். அது வாழையடி வாழையாகி இப்பொழுது அதுவே வழக்கமாகி விட்டது.

 

இல்ல வழிபாடு

 

உண்மையில் ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிப்படுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு.

 

நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை நிறைவேற்றலாம். பூஜை நேரத்தின் போது அமைதியான மனதிற்க்கு இதமான மெல்லிசையை சேர்த்து கொள்ளலாம்.

 

இல்லவழிப்பாட்டிற்கோ ஆலயவழிப்பாட்டிற்கோ முன்னதாக தாம் பூஜை செய்யும் இடச்சூழல் கடலோரத்திலோ, நதியோரத்திலோ, மலைஉச்சியிலோ, எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவிலோ அமைந்திருப்பதை போன்று ஆழ்மனதில் ஆழமாக பதிந்து கொள்ளவேண்டும்.

 

பூஜைக்கு முன் நமக்கேற்ப்பட்டிருக்கும் மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு “என்னையும் இம்மண்ணையும் அந்த விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும் பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு பூஜை செய்ய போகும் நான் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்பதை உணர்ந்து பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க வேண்டும்.

 

சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும் போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன் இருப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 

பிரார்த்தனையின் போதும் கூட. இறைவன் நம்மிடத்தில் இருந்து எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி, மரியாதை ஆகும். சுருங்க கூரின் நாம் நம் தாய்க்கோ தந்தைக்கோ கால் பிடித்து விட்டால் எவ்வளவு அன்பாக செய்வோம்.

 

ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் பொழுதும் சரி வைக்கும் பொழுதும் சரி மிகவும் பணிவுடனும் மரியாதையுடனும் செய்தல் வேண்டும். நேரே வந்த ஆண்டவனிடத்தில் நாம் எப்படி பேசுவோம், என்னென்ன கேட்ப்போம்,

 

பக்தி பரவசத்தால் நம் ஜீவாத்மாவை தூய்மைபடுத்தி அந்த பரமாத்மாவோடு ஒன்றிணைக்கலாம். எனவேதான் இங்கு பஜனை மிக மிக அவசியமான ஒன்றாதாகிறது.

 

எண்ணவழிபாடு

 

முதலில் நாம் ஸ்ரீ வீரனை நேசிக்க பழகி கொள்ள வேண்டும். நாம் எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி அவரோடு பேசுவது போன்று விளையாடுவது போன்று நம் எண்ணங்களால் அவரோடு உறவாட வேண்டும்.

 

அல்லது அவருடைய சரித்திரத்தை படித்து அதில் அவர் செய்யும் வீர சாகசங்களை அவருடைய பெருமைகளை நாம் நமது எண்ணத்திரையில் ஒரு திரைப்படத்தை காண்பதை போல் காணவேண்டும்.

 

உணவுக்கு முன் “அய்யனே, அப்பா வீராண்டவரே எமக்கு இவ்வேளை உணவருளியமைக்கு மிக்க நன்றி என் தேவனே. வீரவா, தாங்கள் தயவு செய்து இதுப்போலவே என்தன் வாழ்வின் இறுதி நொடிவரையிலும் குறைவல்லாது உணவருளவேண்டும் எம்பெருமானே,

 

ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா” என்றும், உறங்குவதற்க்கு முன் “ஐயனே, அப்பா பரமாத்ம தேவனே பரலோக நாயகனே பாராலும் மன்னவனே, ஸ்ரீமஹா மதுரை வீராண்டவனே, அப்பா தாங்கள் எமக்கு இந்நிம்மதியான உறக்கம், இந்நிம்மதியான தருணம், இந்நிம்மதியான சூழ்நிலையினை அருளியமைக்கு மிக்க நன்றி என் அய்யனே ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா” என்றும்,

 

துயில் களைந்ததும் “அய்யனே என் தேவ பெருமானே, இந்த பொழுது எமக்கு இன்பமான நலமான அதிர்ஷ்ட்டமான வெற்றியான பொழுதாக அமைய எல்லாம் வல்ல வீரவரே தாங்கள் தயவு செய்து எமக்கு அருள் புரியவேண்டுமப்பா, ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமோ நமஹா” என்றும் பிரார்த்திக்க வேண்டும்.

 

எப்படி தூய்மை படுத்துவது?

 

இந்த எண்ணவழிப்பாடு சற்று கடினமான ஒன்று. ஆனால் அதுதான் நம்மை ஸ்ரீவீரரோடு பேசவும், விளையாடவும், கட்டிதழுவி அன்பை பறிமாறிக்கொள்ளவும் செய்யும். நாளை நிகழபோவதை இன்றே அறிவித்துவிடும். முதல் அறிமுகத்தின் போதே நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதை திரை போட்டு காட்டிவிடும்.

 

நம் மீது கொண்ட பொறாமையினால் நம் பின்னால் யாரேனும் சூழ்ச்சியோ சூனியமோ எது செய்தாலும் அது நம்மை துளியும் அணுக முடியாது. மாறாக, கயவர் யார் என்பதை நமக்கு காட்டி கொடுத்து அவரின் தோல்வியையோ அழிவையோ மிக விரைவிலேயே நம் விழிகளுக்கு முன்நிலையில் கொண்டு வரும்.

 

நாம் ஒன்றை நோக்கி அடி எடுத்து வைத்தால் நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம். வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறுவோம். மனத்தை தூய்மை படுத்துவது கடினமான ஒன்று என்றாலும் ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறுவதுப்போல் நாம் முழுமூச்சுடன் செயல்ப்பட்டால் நிச்சயம் நம்மால் இயலும்.

 

வைணத் தலங்களில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள்

வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற ஒன்று...

Leave a Reply

Left Menu Icon