Menu

திருவிழாவில் பைக் திருட்டு : சோகத்தில் இளைஞர் தற்கொலை

உசிலம்பட்டியை அடுத்த கருக்கட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 24). இவர் மோட்டார் சைக்கிளில் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

அங்கு நடைபெற்ற ஆடல்-பாடல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

விழா முடிந்ததும் ஊருக்கு செல்ல மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அங்கு மோட்டார் சைக்கிள் இல்லை. அதை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் பலன் இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயபாண்டி, உசிலம்பட்டி அரசு பள்ளி மைதானத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon