Menu

1,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்!!

திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3 இடங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:–

 

தமிழக அரசு விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வேலை வாய்ப்பை அதிகரிக்கும், தனிநபர் வருமானத்தை உயர்த்தும். ஏழ்மையை குறைக்கும். தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறும். திருமங்கலத்தில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படுகிறது. அனைத்து அரசு துறைகளுக்கும் தேவைக்கேற்ப நிதி வழங்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. கடன் சுமையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பட்ஜெட்டை விமர்சிக்கும் முன்பு மு.க.ஸ்டாலின் அதனை முழுமையாக படிக்க வேண்டும். பட்ஜெட்டை படித்து அவருக்கு விமர்சிக்க தெரியவில்லை. காகிதப்பூ மணக்காது. அட்டை கத்தி சண்டைக்கு உதவாது என்று பழைய பல்லவியை அவர் பாடுகிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு திட்டங்களை வாரி வழங்கி வருகிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நாங்கள் பெற்று வருகிறோம். இது புரியாமல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Leave a Reply

Left Menu Icon