Menu

மதுரை திருமங்கலத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி 500 கிலோ பறிமுதல்

மதுரை திருமங்கலத்தில் இறைச்சி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், கெட்டுப்போன ஆட்டிறைச்சி 500 கிலோ பறிமுதல்.

திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் சுகாதாரமின்றியும், கெட்டுப்போன இறைச்சியும் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பல்வேறு இறைச்சிக் கடைகளில் ஆய்வு நடத்திய சுகாதார அலுவலர்கள், ராஜாஜி தெருவில் உள்ள முகம்மது ராஜா என்பவரது கடையில் உணவகங்களுக்கு சப்ளை செய்வதற்காக வைத்திருந்த 300 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி இருப்பதை கண்டறிந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் 200 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, பினாயில் ஊற்றி மண்ணில் புதைக்கப்பட்டது.

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon