Menu

Madurai 00:56 AM +24°C

மதுரை திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது.  இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

Image result for திருமலை நாயக்கர் மஹால் தூண்கள்

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

தூண்கள்:

18 ஆம் நூற்றாண்டில் இந்த அரண்மனையின் பகுதியாக இருந்த பல கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன அல்லது அருகிலுள்ள தெருக்களுடன் இணைக்கப்பட்டன. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி.

Image result for திருமலை நாயக்கர் மஹால் தூண்கள்

தேசிய நினைவு சின்னம்:
சுதந்திரத்திற்குப் பிறகு திருமலை அரண்மனை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இப்போது தமிழ்நாடு தொல்பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவு டிக்கெட் விலை ரூ .10 ஆகும்

ஒலியும், ஒளியும்:
இந்த அரண்மனை நகரின் கிழக்குப் பகுதியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமலை நாயக்கரின் பெருமைகளை விளக்கும் வகையில் தினமும் ஒலியும், ஒளியும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும், இரவு 8 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Image result for திருமலை நாயக்கர் மஹால் தூண்கள்

வருகை நேரம்
9.00 AM to 5.00 PM பொது வருகை. மதிய உணவு இடைவேளை 01.00 pm to 01.30 pm

 

 

Leave a Reply

Left Menu Icon