ரஜினியின் புதிய திரைப்படத்திற்க்கு வெடி வெடித்த இளைஞரை போலிஸார் அடித்து இழுத்து சென்றனர்.
மதுரை காளவாசல் அருகே உள்ள திரையரங்கில் ரஜினியின் புதிய திரைப்படமான 2.O திரைப்படம் இன்று அதிகாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
திரையரங்கு முன்பாக வெடி வெடித்து கொண்டாடிய இளைஞரை போலீஸார் அடித்து இழுத்துச் சென்றனர் பின்பு ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவரை விடுவித்தனர்
மதுரை மாநகர் பகுதியில் 32 திரையரங்குகளில் 2.o திரைப்படம் வெளியிடப்படுகிறது. இந்த திரைப்படம் அதிகாலை 6 மணிக்கு வெளியிட்ட காரணத்தினால் திரையரங்கு முன்பு ரஜினியின் ரசிகர்கள் ஒன்றுகூடி வெடிவெடித்து கேக் வெட்டி மகிழ்ச்சிகரமாக கொண்டாடினர்
32 திரையரங்குகளிலும் தேவையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்