Menu

துரோகிகளின் பகல் கனவு காணாமல் போகும் – ஓ. பன்னீர்செல்வம்

மகளிர் சைக்கிள் பேரணியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டனர்.

துணை முதல்வர் ஓ பி எஸ் நிறைவுரை:

கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருநாமத்தை வணங்கி, ஜெயலலிதா அம்மா அவர்களை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

அம்மா பேரவை சார்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு , ஜெயலலிதா 70ம் பிறந்த நாள் விழா, இரு பெரும் தலைவர்களின் நல்லாசியோடு இன்று மாபெரும் மகளிர் சைக்கிள் பிரச்சாரப் பேரணி நடைபெறுகிறது.

வருவாய்த் துறை அமைச்சர் எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் விஞ்ஞானப் பூர்வமாக யோசித்து வரலாற்று சாதனை நிகழ்ச்சிகளாக மாற்றுவது ஜெயலலிதா காலத்தில் இருந்து தொடர்கிறது .

இன்று மகளிர் சைக்கிள் பேரணி மூவாயிரம் மகளிர் கலந்து கொள்ள நடத்துகிறார். கழகம் நடந்து வந்த லட்சியப் பாதைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதிமுகவை வெற்றிப் பெற வைக்க, அம்மா சொன்ன மாதிரி பெண்கள் நாட்டின் கண்கள் என்று, அதை நிரூபிக்கும் விதமாக, எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிக் கொடி நாட்டும் என நிரூபிக்கும் விதமாக கூடி இருக்கிறீர்கள்.

வருவாய்த் துறை அமைச்சர்க்கும், அம்மா பேரவைப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

முன்னாள் பேசிய அமைச்சர் பெருமக்கள் மிகவும் எழுச்சியோடு  அதிமுக எதற்காக உருவாக்கப் பட்டது? அம்மாவின் தியாக வாழ்க்கையில் மாபெரும் இயக்கமாக உருவாக்கி, 2016ல் ஆண்ட கட்சியே மறுபடியும் ஆட்சி அமைத்து 32 ஆண்டு காலத்திற்குப் பிறகு சாதனை புரிந்து, அம்மாவின் ஆட்சி எந்தக் குறையும் சொல்ல முடியாத நல்லாட்சியாக எடப்பாடி யார் தலைமையில் நடைபெறுகிறது.

இது நம்மை விட்டுச் சென்ற துரோகிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி, ஓராண்டைக் கடந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அன்பு, அறிவு, ஆற்றல் மிகுந்த, அண்ணா மற்றும் எம் ஜி ஆரின் மொத்த உருவமான ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அதிமுகவை உருவாக்கி, நமக்குத் தந்து இருக்கிறார்கள். எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் முதல்வராக இருந்து, பயனாளிகளும், எதிர்கால சந்ததியினரும் பயன் பெறும் வகையில் நல்ல பல திட்டங்களை மக்களுக்குத் தந்து, அந்த திட்டங்கள் இன்றும் அம்மாவின் ஆட்சியில் தொடர்கிறது .

எல்லா வற்றிற்கும் மேலாக, பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து, ஆண்களுக்கு நிகராக அவர்கள் உயர, பெண்கள் நாட்டின் கண்கள் எனப் போற்றி, 1991ல் லேயே தொட்டில் குழந்தை திட்டம் தந்து, அந்த திட்டத்தில் ஆறாயிரம் குழந்தைகள் மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்களாக, வழக்கறிஞர்களாக தங்கள் வாழ்க்கையைத் துவக்கி இருக்கிறார்கள்.

அந்தப் பெண் குழந்தைகள் திருமண வயது அடைந்த பிறகு 8 கிராம் தங்கமும், பணமும் கொடுத்து திருமண உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பெண்கள் துயரம் கண்டு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன் தந்தார்கள். இன்று அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டம் சென்று சேர்ந்து விட்டது.

தாய்மார்களின் மகப் பேறு நிதி உதவியாக 18 ஆயிரம் ரூபாயை அம்மாவின் அரசு வழங்கி இருக்கிறது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் நிலையை உயர்த்த, சமத்துவ சோசலிஸ சமுதாயத்தை உண்டாக்கி, அம்மாவின் இனிஷியலையும் பெயர்க்கு முன்னால் போட அரசாணைக் கொண்டு வந்தார்கள்.

இப்போது துரோகிகளும், எதிர்க்கட்சி திமுகவும் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சிக் காணாமல் போகும் என பகல் கனவு காண்கிறார்கள்.

நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் சுயநலத்தோடு ஆட்சிக் காணாமல் போகும் என்கிறார்கள். தீராத பேராசையில் கெட்ட எண்ணத்துடன் கட்சியையும் ஆட்சியையும் ஒரு குடும்பத்திற்குள் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள்.

அதிமுக தொண்டர்கள் இயக்கம். இங்கு ஒன்றரை கோடி தொண்டர்களில் எவரும், முதல்வர் மற்றும் துணை முதல்வராகவும் வர முடியும்.

அங்கு இருக்கக் கூடிய விசுவாசிகள் நம்மிடம் வருவார்கள் என எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். வந்து பணியாற்றினால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

துரோகிகளின் பகல் கனவு, பெண்கள் உங்கள் மூச்சுக்காற்றால் காணாமல் போகும்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிப் பெற்று, அந்த வெற்றி வேலை திருப்பரங்குன்றம் முருகனுக்கு சமர்ப்பிப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிறைவுரையாற்றினார்.

சைக்கிள் பேரணி திருப்பரங்குன்றம் தொகுதி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, இன்று மாலை தனக்கன்குளம், 100 அடி உயர அதிமுக கொடிக் கம்பம் அருகே நிறைவுற்று அங்கு அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ளும் நிறைவு விழா நடைபெறுகிறது.

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon