Menu

மதுரையில் நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்

மதுரையில் நான்கு வழிச்சாலை ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அக்.,12ல் அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு (என்.எச்.ஏ.ஐ.,) உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மதுரையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கோமதிபுரம் நான்கு வழிச்சாலை – சிவகங்கை ரோடு சந்திப்பில் 3 அடி உயரத்துக்கு சாலையில் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது.

 

மழைநீர் வெளியேற வழியின்றி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதே இதற்கு காரணம். கலெக்டர் நடராஜன் நேற்று ஆய்வு செய்தார். அவரது உத்தரவுப்படி பெருங்காய நிறுவனம் வழியாக மழை நீர் வெளியேற்றப்பட்டது.

 

கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை நீர் வெளியேற வழியில்லை. என்.எச்.ஏ.ஐ., சார்பில் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

 

அவரது உத்தரவுபடி அக்.,12ல் நான்கு வழிச்சாலை ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும், என்றார்.

 

கருப்பாயூரணி ரோட்டில் 27 பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. நேற்று தேங்கிய நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 

மழைநீர் வெளியேற கால்வாய் வசதியை பொதுப்பணித்துறை ஏற்படுத்தவில்லை. இங்கு மேம்பாலம் கட்டினால் தான் தீர்வு ஏற்படும், என்றார்.

 

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு!!

சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர்...

Leave a Reply

Left Menu Icon