Menu

Madurai 00:54 AM +24°C

மதுரை மாவட்ட வருவாய்க் கோட்டங்கள்

மதுரை மாவட்டம் மூன்று வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை;

 

மதுரை

உசிலம்பட்டி

மேலூர்

 

இம்மாவட்டம் 11 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

 

மதுரை வடக்கு

மதுரை தெற்கு

மதுரை கிழக்கு

மதுரை மேற்கு

திருப்பரங்குன்றம்

திருமங்கலம்

பேரையூர்

உசிலம்பட்டி

வாடிப்பட்டி

மேலூர்

கள்ளிக்குடி

 

1. மதுரை (வடக்கு) வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். மதுரை வடக்கு வட்டம் 1 அக்டோபர் 1967ல் நிறுவப்பட்டது.

 

இவ்வருவாய் வட்டத்தில் 82 வருவாய் கிராமங்கள் உள்ளது. இவ்வட்டத்தில் மொத்தம் 16,926 ஹெக்டேர் நிலம் உள்ளது. அதில் நன்செய் நிலம் 8,125 ஹெக்டேராகவும்; புன்செய் நிலம் 4,106 ஹெக்டேராகவும் உள்ளது.

 

இவ்வட்டத்தில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பரவை – பேரூராட்சி உள்ளது. இவ்வட்டத்தில் 14 கல்லூரிகளும், உயர்நிலைப் பள்ளிகளும், மேனிலைப் பள்ளிகளும் உள்ளது. இவ்வட்டத்தில் ஒரு அரசு மருத்துவ மனையும்; 24 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது.

 

2. மதுரை (தெற்கு) வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகம் மதுரையில் உள்ளது. மேலூர் வருவாய் கோட்டத்தில் அமைந்த இந்த வட்டத்தின் கீழ் மூன்று உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.

 

3. மதுரை கிழக்கு வட்டம், மதுரை வடக்கு வட்டத்தின் 98 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இப்புதிய வருவாய் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது.

 

22,111 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மதுரை கிழக்கு வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 1,58,680 ஆகும். அதில் ஆண்கள் 80,895; பெண்கள் 77,785 ஆக உள்ளனர்.

 

மதுரை கிழக்கு வட்டத்தில் 106 வருவாய் கிராமங்கள் கொண்டது. இவ்வட்டத்தில் 9779 ஹெக்டேர் நன்செய் நிலமும்; 4026 ஹெக்டேர் புன்செய் நிலமும் கொண்டுள்ளது.

 

4. மதுரை மேற்கு வட்டம், மதுரை தெற்கு வட்டத்தின் வருவாய் கிராமங்களையும் மற்றும் மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தின் சில பகுதிகளையும் கொண்டு, 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது.

 

மதுரை மேற்கு வட்டம் 21 வருவாய் கிராமங்களைக் கொண்டது. மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகம், 23, தேனி சாலை, பென்னர் காலனி, விராட்டிப்பத்து, மதுரை 625014 எனும் முகவரியில் இயங்குகிறது.

 

இவ்வருவாய் வட்டத்தில் 23 கல்லூரிகளும், 14 உயர்நிலைப்பள்ளிகளும்; 13 மேனிலைப்பள்ளிகளும் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் கொண்டது. மேலும் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளது.

 

5. திருப்பரங்குன்றம் வட்டம், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள் மதுரை தெற்கு வட்டத்தை சீரமைத்து, திருநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 12 பிப்ரவரி 2014 புதன் கிழமை அன்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சென்னையிலிருந்து காணோலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

 

இவ்வட்டத்தில் மதுரை மாநகராட்சியின் திருப்பரங்குன்றம், திருநகர், நிலையூர், அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், மாடக்குளம் போன்ற பகுதிகள் அடங்கியுள்ளது. இவ்வட்டடத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

 

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம், திருநகரிலிருந்து தனக்கன்குளம் செல்லும் பாதையில் உச்சிக்கருப்பணசாமி கோவில் அருகே மொட்டமலையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 6,340 சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

 

6. திருமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக திருமங்கலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஆறு உள்வட்டகளும் 108 வருவாய் கிராமங்களும் இருந்தன.

 

திருமங்கலம் வட்டத்தின் மூன்று உள்வட்டங்களைக் கொண்டு, புதிய கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.

 

7. பேரையூர் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இந்த வட்டத்தின் தலைமையகமாக பேரையூர் நகரம் உள்ளது.

 

இந்த வட்டத்தின் அத்திப்பட்டு, எழுமலை, மோதகம், பேரையூர், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி என ஆறு உள்வட்டங்களில், 75 வருவாய் கிராமங்கள் உள்ளது.

 

8. உசிலம்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் உசிலம்பட்டி நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

 

9. வாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். மதுரை வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஏழு உள்வட்டங்களும், 77 வருவாய் கிராமங்களும் உள்ளன.

 

வாடிப்பட்டி வட்டத்தில் தென்கரை உள்வட்டம், சோழவந்தான் உள்வட்டம், தனிச்சியம் உள்வட்டம், அலங்காநல்லூர் உள்வட்டம், பாலமேடு உள்வட்டம், முடுவார்பட்டி உள்வட்டம் மற்றும் நீரேத்தான் உள்வட்டம் என ஏழு உள்வட்டங்களைக் கொண்டுள்ளது.

 

10. மேலூர் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமும், வட்டாட்சியர் அலுவலகமும் மேலூர் நகரத்தில் உள்ளது.

 

இந்த வட்டத்தின் கீழ் 8 உள்வட்டங்களும், 84 வருவாய் கிராமங்களும் உள்ளது.

 

11. கள்ளிக்குடி வட்டம், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் வட்டத்தை சீரமைத்து, கள்ளிக்குடியை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.

 

கள்ளிக்குடி வட்டத்தில் கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள் உள்ளது.

 

எழுகடல் தெரு, மதுரை

ஏழுகடல் தெரு, மதுரை (Elukadal Street, Maurai) மதுரை...

Leave a Reply

Left Menu Icon