Menu

மதுரை அரசியாக பதவி ஏற்கும் மீனாட்சி பட்டாபிஷேகம் 2019

தமிழ் நாட்டின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. சித்திரை திருவிழாவின், முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது.

மீனாட்சி பட்டாபிஷேகம் விழாவை  பற்றி  திரு. கு ஞானசம்பந்தம்
அவர்கள்  அளித்த விளக்கம் என்னவென்றால்,

அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 8 மணிக்கு மேல் விருச்சிக லக்னத்தில் மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. அப்போது அம்மனுக்கு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்களால் இழைத்த செங்கோல் வழங்கி சிறப்பு தீபாராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன், செங்கோலை அவருடைய பிரதிநிதியாக இருந்து கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் பெற்றுக் கொள்கிறார். இரவு 9 மணிக்கு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மதுரையின் அரசியாக மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
மதுரையில் பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி பட்டத்து ராணி ஆகிறார் . சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம். 

மதுரை சித்திரை திருவிழா ஒவ்வொரு நாள் நிகழ்வுகளின் சிறப்புகளை அறிந்து கொள்ள  தொடர்ந்து in4madurai.com தளத்தை காணுங்கள்.

  

மதுரையில் விடிய விடிய கள்ளழகர் தசாவதாரம்!

தேனூர் மண்டபத்திலிருந்து மாலை 3.45 மணிக்கு...

Left Menu Icon