Menu

மதுரை வழிபாட்டிடங்கள்?

மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின்தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது கிபி 1623 இலிருந்து 1655 க்குள் கட்டப்பட்டதாகும். தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது.

நகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள்அமைந்துள்ளன.[120][121] மதுரையிலிருந்து 21 கிமீ தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில்அமைந்துள்ளது. சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது.

காசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும்.இப்பள்ளிவாசல் 13 ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர்.மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பராஇப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.

கோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது.

புனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது

Leave a Reply

Left Menu Icon