Menu

மதனகோபால சுவாமி கோயில்

மதனகோபால சுவாமி கோயில், மதுரை நகரத்தின் மேல மாசி வீதி – தெற்கு மாசி வீதி சந்திப்பில், பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது.

 

இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர் மதனகோபால் சுவாமி என்ற பெயருடன் கையில் புல்லாங்குழவுடன், ச‌‌த்‌தியபாமா‌ – ருக்மணி சமேதராக அருள் புரிகிறார்.

 

மதுரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகள் தனியாக உள்ளது. தல விருட்சம் வாழை மரம்..

 

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், மதனகோபால சுவாமி கோயில் கற்றூண்களில் பலவற்றை, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பிலடெல்பியா காட்சிக்கூடத்தில் ஒரு மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது.

 

கூடலழகர் பெருமாள் கோயில் மற்றும் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மதனகோபால சுவாமி கோயிலுக்கு மிகமிக அருகில் அமைந்த கோயில்கள்.

 

பிற சன்னதிகள்

நவநீதகிருஷ்ணன் சன்னதி

சக்கரத்தாழ்வார் சன்னதி

தலச்சிறப்பு

ஆண்டாளும் பெரியாழ்வாரும் ஒரு முறை திருவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், மதனகோபால சுவாமியை வழிப்பட்டுச் சென்றதாக இக்கோயில் தல புராணம் கூறுகிறது.

 

துணைக் கோயில்கள்

மதனகோபால சுவாமி கோயில் நிர்வாகத்தின் கீழ் அமைந்த கோயில்கள்;

 

ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மதுரை 625001

வேங்கடமூர்த்தி அய்யனார் கோயில், அனுப்பானடி, மதுரை 625009

சேவகபெருமாள் அய்யனார் கோயில் & வெங்கடஜலபதி கோயில், ஆலமரம் பேருந்து நிறுத்தம், அண்ணாநகர், மதுரை 625020

 

திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி

இராம நவமி

வைகுண்ட ஏகாதசி

வசந்தோற்சவம்

பாவை நோன்பு

திருக்கல்யாணம்

 

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon