Menu

Madurai 00:55 AM +24°C

மதுரைக்கான தனி அடையாளம் மற்றும் சிறப்புகள்

மதுரை மாநகரின் தனி சிறப்பே அந்த நகரின் வடிவமைப்பு தான். மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழமையான மதுரையின் வரலாற்றுச் சான்றுகள்.

 

இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவமைப்புகளின் பட்டியலில் மதுரை மாநகரும் ஒன்று. ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் ஊர் மதுரையாக மட்டுமே இருக்கமுடியும். எந்த நேரமும் மக்கள் விழாவோடும் மகிழ்ச்சியோடுமே இருப்பார்கள்.

 

மதுரையில் சில தெருக்களின் பெயர்கள் தமிழ் மாதங்களின் பெயரில் அமைந்துள்ளது. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி. இது மட்டுமல்ல நீர் நிலைகளின் பெயரைக்கொண்டே தங்களின் ஊருக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்தார்கள்.

 

மாடக்குளம், ஆத்தி குளம், கரிசல் குளம் போன்றவை இதற்கு உதாரணம். மதுரை மக்களுக்கு பெருமை அளிக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக உள்ளதால் தான் எம்.ஜி.ஆர். (மாட்டுத்தாவணி) பேருந்து நிலையம் போன்ற பெரிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

 

தமிழகத்தில் மதுரையின் வரலாற்றுக்கென்றே ஒரு தனி கவன ஈர்ப்பு இருப்பதை நம்மால் உணர முடியும்.

 

மதுரையின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோயில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பு கட்டப்பட்டதாக சான்றுகள் உண்டு. பாண்டிய மன்னர்களால் முதலில் மதுரையில் கட்டப்பட்ட கோயில் இது.

 

பின் இஸ்லாமிய படையெடுப்பினால் இந்த கோயில் அழிந்து போய் மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் மீண்டும் புத்துயிர் பெற்று இன்று புதுப்பொலிவுடன் தமிழரின் கட்டிடக் கலையின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது.

 

சக்தியின் வடிவமான மீனாட்சி அம்மன் பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து தெய்வமான இடமாகவும் கருதப்படும் நகர் மதுரை. முக்கிய சக்தி தலமாக விளங்குகிறது மதுரை.

 

இன்றளவும் மீனாட்சி அம்மனின் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு உதாரணம். மேலும் அன்றைய அரசரின் ஆட்சி சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகிறது.

 

உண்மையில் பலருக்கும் மதுரை என்றாலே அங்குள்ள மீனாட்சி அம்மன் திருகோயிலே முதலில் நினைவிற்கு வரும் இடமாக இருக்கும். உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்டமான பண்டிகை இந்த சித்திரை திருவிழாவாக தான் இருக்கும்.

 

முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் திருவிழா நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மீனாட்சியம்மன் தேரோட்டம் புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

வரலாற்று சிறப்பு மிக்க பல பொழுதுபோக்கு தளங்கள் மதுரையில் உள்ளது. கவின்மிகு கலைநயத்துடன் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹால், ஆயிரம் கால் மண்டபம், புது மண்டபம் போன்ற பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இங்கு காணப்படுகிறது.

 

மேலும் ராமகிருஷ்ண மடம், ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம், காந்தி அருங்காட்சியகம் போன்றவை மதுரையின் சிறப்பை விளக்கும் விதமாக அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் காணப்படுகிறது.

 

மதுரை மாநகரில் இயற்கை எழில் கொஞ்சும் பல அருவிகள் உள்ளது. வைகை ஆற்று கரையில் அமைந்துள்ள மதுரைக்கு அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி இங்கு உள்ளது. இந்த அருவி அறுநூறு அடி உயரத்தில் இருந்து விழுகிறது.

 

கிளிமூக்கு அருவி, காட்டுப்பாறை அருவி, ஒத்தபாறை அருவி, கிளிநொச்சி அருவி மற்றும் மழைக்காலங்களில் மட்டும் தோன்றி மறையும் பல அருவிகள் மதுரையில் காணப்படுகிறது.

 

மலிவு விலையில் இரவு பகல் என 24 மணிநேரமும் சாப்பாடு தரும் ஊர். திரும்பிய இடமெல்லாம் விதவிதமான கடைகள் உணவகங்கள் சாப்பிட வருவோரின் சொர்க்க பூமியாகவே மதுரை திகழ்கிறது. அதிக வடை கடைகள் உள்ள ஊர் மதுரை மட்டுமே.

 

இனிமையின் இயல்பே தமிழும் மதுரையும். பாலில் கலந்த நீரை எப்படி பிரிக்க இயலாதோ அதே போல் தமிழையும் மதுரையும் பிரிக்க இயலாதவை என்பது மறுக்க முடியாத உண்மையே. அதனால் தானோ என்னவோ மதுரையை புகழ்ந்த புலவர் பெருமான்கள் எல்லாம் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

 

புறநானூறு தமிழ்கெழு கூடல் என்று மதுரையை போற்றியுள்ளது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் தாம் பாடிய சிருபாணாற்றுப்படையில் மதுரையை “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

உலகம் எல்லாம் இரவு தூங்கி போனாலும் மதுரை என்றும் தூங்கா நகரமாக ஜொலித்துக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Left Menu Icon