Menu

Madurai 01:27 AM +23°C

விவசாய நிலங்களுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது!!

மதுரை To நத்தம் நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள விவசாய நஞ்சை – புஞ்சை நிலங்களுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது , என  சம்மந்தப்பட்ட விவசாயிகள் மதுரை ஆட்சியர் நடராஜன் அவர்களிடம்   மனுக் கொடுக்கப்பட்டது,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயி ஜெயகுமார், மற்றும் கண்ணன் , அவர்கள்
மதுரை மாவட்டம், மதுரை வடக்கு மந்திகுளம், பெரியபட்டி, காவனூர் , சின்னப்பட்டி, சத்திரப்பட்டி, மஞ்சம்பட்டி, ஆகிய கிராமங்கள் வழியாக 4 வழி நெடுஞ்சாலை  S மென்ட் ஆக வருகிறது என ஏற்கனவே ஆர்ஜித மனு  செய்தியிருந்தோம், அந்த மனுவை ஒருமனதாக தள்ளுபடி செய்து விட்டனர்,
அதன் பின் எங்கள் பட்டா, சிட்டா போன்றவற்றை கொண்டு வர சொல்லி விவசாய நிலத்திற்க்கு  ஏக்கர் க்கு 4000 ரூபாய் தருவதாகவும், விட்டு மனை பிளாட் டாக பதிவு செய்திருந்தால் ஒரு சதுர மீட்டர்க்கு 2000 ௹பாய் கொடுப்பதாகவும் சொல்லியுள்ளனர், இதற்க்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது , ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூரியுள்ளார்,
மதுரை To நத்தம் நெடுஞ்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தப்பட்டு    4 மாதங்கள் ஆகி விட்டது, நிலங்களை கையகப்படுத்தும் போது கருத்து கேட்கும் கூட்டம் நடைப்பெறும் என DRO அவர்கள் கூறினார், அந்த கூட்டத்தில் நாங்கள் அதிக விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் ஆகையால் 4 வழி சாலையே வேனாம் என்று தான் சொன்னோம், ஆனால் DRO சாலை கண்டிப்பாக வரும் என்றார்,
அந்த நிலத்திற்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து  தரப்படும் என்றார் , ஆனால் இப்போது ஒரு சதுர மீட்டர்க்கு 112 ரூபாயும் அடுத்துள்ள இடத்தில் சதுர மீட்டர்க்கு 520 ரூபாயும் , 200 300 மடங்கு வேறுபாட்டில் விலை நிர்ணயம் செய்துள்ளனர்,
இவ்வாறு இவர்கள் நிர்ணயம் செய்த விலையை வைத்துக் கொண்டு வேறு எந்த இடத்திலும் விவசாய நிலம் வாங்க முடியாது,
விவசாய குடும்பமாக உள்ளதால் எங்களு விவசாய நிலம் வாங்கும் அளவிற்க்கு விலை கொடுக்க வேண்டும்,
சுமார் 60,000 சென்டுக்கு கொடுக்க வேண்டும்
சுமார் 50 விவசாயிகள் பெரிதும் பாதிபடைந்துள்ளனர், எங்களுக்கு தகுந்த விலை கொடுத்து விட்டால் நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்க்கு முழு ஒத்துழைப்பு தரவோம் , இல்லாவிட்டால் நாங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்,
இதுப்பற்றி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் , அவர்கள் தகுந்த  நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள், இவ்வாறு கூறினார்

Leave a Reply

Left Menu Icon