Menu

ஆரோக்கிய பாரத பயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆரோக்கிய பாரத பயணத்தை இன்று திருமங்கலத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவங்கி வைத்தார்

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆரோக்கிய பாரத பயணத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி மாணவர்கள் ஆரோக்கிய பாரத பயணம் பற்றிய வில்லு பாட்டு பாடியும், புறாக்கள் மற்றும் மூன்று வண்ண பலுன்களை பறக்க விட்டும் விழாவை தொடங்கி வைத்தனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மகத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் ஆரோக்கிய பாரத பயணம் என்ற சைக்கிள் பேரணி அக் 2-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கியது.

இந்த ஆரோக்கிய பாரத பயணம் 26.01.2019 அன்று தலைநகர் டில்லியில் நிறைவடைகிறது.

இந்த பயணத்தின் நோக்கமாக உப்பை குறை, சர்க்கரையை குறை, கொழுப்பை குறை என்பதே ஆகும் இதன் மூலம் ஆரோக்கியமான உடல் நலம் பெற முடியும் என கூறினார்.

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon